search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலுமிச்சை பழம் ரூ.8-க்கு விற்பனை
    X

    எலுமிச்சை பழம் ரூ.8-க்கு விற்பனை

    • சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
    • கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது. ஒரு பழம் ரூ.2 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தர்பூசணி, மூலம் பழம் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், கரும்பு சாறு, இளநீர், சர்பத் உள்ளிட்டவைகளை நாடி வருகின்றனர். இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எலுமிச்சை பழத்தின் வரத்து 20 சதவீதம் குறைந்துள்ளது.

    வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, தினசரி சந்தை, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 30 முதல் 40 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது.

    இங்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் ஜூஸ் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்கள், விடுதி உணவகம் நடத்துபவர்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் தங்களது பல்வேறு ேதவைகளுக்காகவும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் எலுமிச்சை பழங்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் அதிக வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×