search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில்  உரக்கடைகளில் விற்பனை விலை   தகவல் பலகை வைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    தென்காசி மாவட்டத்தில் உரக்கடைகளில் விற்பனை விலை தகவல் பலகை வைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
    • பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மொத்தம் 29 ஆயிரம் ஹெக்டேர் நெல், 16,085 ஹெக்டேர் சிறுதானியங்கள், 34,700 ஹெக்டேர் பயிர் வகை,3400 ஹெக்டர் பருத்தி, 1000 ஹெக்டேர் கரும்பு, 1960 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு தேவையான உரங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் போதிய அளவில் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 192 மெட்ரிக் டன் யூரியா, 1234 மெட்ரிக் டன் டி ஏ பி, 478 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3905 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 323 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பு உள்ளன. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 315 மெட்ரிக் டன் யூரியாவும்,372 மெட்ரிக் டன் டிஏபி யும்,170 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 70 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரமும், 767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன.பயிர் பருவங்களுக்கு ஏற்ப தொடர்ந்து போதிய உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    உர விற்பனையாளர்கள் அனைவரும் விவசாயிகளின் தேவைக்கு போதிய உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் பதுக்கள் செய்யக்கூடாது, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது.

    உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவியில் பில் போட்டு மட்டுமே மானியத்தில் வரும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் அனைத்து உர விற்பனையாளர்களும் தினமும் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை கடைக்கு வரும் அனைவருக்கும் தெரியும் படியாக தகவல் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்யக்கூடாது. மீறினால் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    உரங்கள் இருப்பு விற்பனை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான புகார் ஏதும் இருப்பின் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633-295430ஐ அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் வேளாண்மை துறை அலுவலர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×