என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அவினாசி மக்கள் நீதிமன்றத்தில் 272 வழக்குகளுக்கு தீர்வு அவினாசி மக்கள் நீதிமன்றத்தில் 272 வழக்குகளுக்கு தீர்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/13/1835714-untitled-1.webp)
X
அவினாசி மக்கள் நீதிமன்றத்தில் 272 வழக்குகளுக்கு தீர்வு
By
மாலை மலர்13 Feb 2023 3:59 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 372 வழக்கு கோப்புகள் சமாதான முறையில் தீர்வுகாண எடுக்கப்பட்டது.
- ரூ.1 கோடியே 23 லட்சத்து 84 ஆயிரத்து 815-க்கு தீர்வு தொகை அளித்து முடிக்கப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி அவிநாசி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் அவிநாசி சார்பு நீதிமன்றத்தில்தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத் ) நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.வடிவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.எஸ்.சபீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. தரணீதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது 372 வழக்கு கோப்புகள் சமாதான முறையில் தீர்வுகாண எடுக்கப்பட்டது. இதில் 272 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 84 ஆயிரத்து 815-க்கு தீர்வு தொகை அளித்து முடிக்கப்பட்டது.
Next Story
×
X