என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கபிலர்மலையில் நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்கக்கோரி கடை அடைப்பு-மறியல்
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வழியாக கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அந்த வழியாக சென்று வந்தது. அதில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பேருந்தில் ஏறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்று வந்து பயனடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதிலிருந்து பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இயக்கவில்லை. இதனால் கிராம பகுதியான கபிலர் மலை சுற்றுவட்டார பகுதியிலிருந்து வெளியூருக்கு செல்பவர்கள் பேருந்தில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோமீட்டர் சென்று பேருந்து ஏற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கபிலக்குறிச்சி ஊராட்சி கபிலர்மலை பகுதியில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த பேருந்து போக்குவரத்து வசதிகளை போலவே மீண்டும் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கபில குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும் இதுவரை பஸ்கள் இயக்கப்படவில்லை.
ெகாரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரியும், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்தும் ஊர் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்னர். அதன்படி இன்று பொதுமக்கள் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்து கபிலர்மலை முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேருந்து இயக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்