search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவி
    X

    மகளிர் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடனுதவி வழங்கினார். அருகில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ரகுபதி, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி மற்றும் பலர் உள்ளனர்.

    மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவி

    • காரைக்குடியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    அரசு கூடுதல் தலைமை செயலாளர், அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

    இளைஞர்கள் எந்த துறையில் ஆர்வ முள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளிக்க சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்துத்துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.கே.ஆர்.ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணையாளர் லெட்சுமணன், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்யன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது மீரா, சாந்தி சிவசங்கர், ராதிகா, சங்கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×