search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னவாசல் கிராமத்துக்கு ரூ.4 கோடியில் சாலை அமைக்க நடவடிக்கை
    X

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளனர்.

    அன்னவாசல் கிராமத்துக்கு ரூ.4 கோடியில் சாலை அமைக்க நடவடிக்கை

    • மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து அன்னவாசல் கிராமத்துக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அன்னவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் தகுதியுடைய 83 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அந்த மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறய தினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்ப டுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு 6.8 கிலோ மீட்டர் தொலைவில் புதிய சாலை அமைப்பதற்கென பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ4.08கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அரசாணை பெறப்பட்டு, பணிகள் ெதாடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.38லட்சத்து 30ஆயிரத்து 910 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முககையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்து, அன்னவாசல் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×