search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது
    X

    பொதுக்கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பேசியபோது எடுத்த படம். அருகில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது

    • தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
    • வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

    திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    Next Story
    ×