search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது சரக்கு வாகனம் மோதல்:மகன் கண் முன்பு தந்தை பலி
    X

    லாரி மீது சரக்கு வாகனம் மோதல்:மகன் கண் முன்பு தந்தை பலி

    • நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
    • அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    சிங்கம்புணரி

    மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    Next Story
    ×