என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உண்டியல் எண்ணும் போது தங்க கொலுசு திருடிய உதவி ஆணையர் மீது வழக்குப்பதிவு
- மடப்பரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் போது உதவி ஆணையர் தங்க கொலுசு திருடினார்.
- அதன்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை
தமிழக அரசின் அறநிலை யத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது கோவில் அறநி லையத்துறை உதவி ஆணை யர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தலா நான்கு சவரன் எடையுள்ள இரு தங்க கொலுசுகளை மறைத்து வைப்பது தெரிந்தது.
இதுகுறித்து அங்கிருந்து அலுவலர்கள் கேட்டபோது நான்கு சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப ஒப்ப டைத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. உண்டியல் எண்ணும் இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வில்வ மூர்த்தி தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து மடப்புரம் கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு இச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.