search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்
    X

    விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்

    • விவசாயிகள் மானியம் பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 2023-24ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து, உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடப்பாண்டிற்கு ரூ.515.534 கோடி நிதி ஒதுக்கீடு முன்மொழிவு பெறப்பட்டு, திட்ட இனங்களில் பயனாளி கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மா பரப்பு விரிவாக்கம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பரப்பு விரிவாக்கம், கொய்யா பரப்பு விரி வாக்கம், பப்பாளி பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நெல்லி பரப்பு விரிவாக்கம், முந்திரி பரப்பு விரிவாக்கம், மல்லிகை மற்றும் கிழங்கு வகை பூக்கள் (சம்பங்கி) பரப்பு விரிவாக்கம், பழைய தோட்டங்கள் புதுப்பித்தல் (மா மற்றும் முந்திரி), பசுமை குடில் மற்றும் நிழல்வலை கூடம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெற லாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×