search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்-அமைச்சர் பேச்சு
    X

    பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் உள்பட பலர் உள்ளனர்.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்-அமைச்சர் பேச்சு

    • பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×