search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா
    X

    பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்ட பக்தர்க–ளுக்கு நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் அன்னதானம் வழங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், வீனஸ் ராமநாதன், ஜெயகாந்தன், ராமதாஸ், கார்த்தி, மகளிரணி திலகவதி மற்றும் நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா

    • சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் ஆனி மாத 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்ம–னுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பையூரை சேர்ந்த மக்கள் கடும் வறட்சி, கொலை, கொள்ளை கார–ணமாக மிகவும் துன்புற்று இருந்தபோது இந்த அம் மனை வேண்டி வழிபட்ட–னர். பின்னர் முஸ்லீம் மன்னர்களின் படையெ–டுப்பின் போது அம்ம–னின் சிலையை வயல் வெளியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கி மறைத்து வைத்தனர்.

    சில நூறு ஆண்டுகளுக் குப்பின் தூர்வாரும் போது சிலை மீட்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். மக்க–ளின் கஷ்டங்களை தீர்த்தும், பிள்ளை வரம் வேண்டுவோ–ரின் வேண்டுதலை நிறை–வேற்றியும், சிவகங்கையை காக்கும் காவல் தெய்வமா–கவும் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி ஏழு நாட்கள் நடை–பெறும். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூச்சொ–ரிதல் விழா அன்று வருடத் தில் ஒரு நாள் மட்டும் குழந் தையுடன் அம்மன் அருள் பாலிக்கிறார்.

    இவ்விழாவில் ஆயிரக்க–ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி–பாடு செய்தனர். இன்று பூச்சொரிதல் விழாவில் மூலவர் காளியம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் பல்வேறு நறுமணத் திரவி–யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றன.

    இதனைத்தொடர்ந்து அம்மன் குழந்தையை மடி–யில் வைத்தபடி சர்வ அலங்காரம் நடைபெற்று, பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரா–தனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காளியம்மனுக்கு பல வகை–யான பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனைகள் செய்து வழி–பாடு செய்தனர். பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    Next Story
    ×