search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது-அமைச்சர்
    X

    கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடன் உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், மாங்குடி எம்.எல்.ஏ. உள்ளனர்.

    2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது-அமைச்சர்

    • நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Sivagangai News Tamil Nadu is becoming the 2nd largest economic state - Minister

    சிவகங்கை

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்ட பத்தில் மாவட்ட அளவி லான பெருந்திரள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டு களில், 85 சதவீதம் வாக்கு றுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    முதல்-அமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் வழிகாட்டு தலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீ டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனை வோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டி லான தொழிற்கடனு தவிகளும் வழங்கப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத்,, மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×