search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு வந்த மணப்பெண்
    X

    புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் வந்த காட்சி.

    மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு வந்த மணப்பெண்

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    Next Story
    ×