search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அறுபத்தி மூவர் வழிபாடு
    X

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அறுபத்தி மூவர் வழிபாடு நடைபெற்ற காட்சி.

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அறுபத்தி மூவர் வழிபாடு

    • வீரட்டானேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழ் மாத முதல் சோமவார தினத்தன்று அறுபத்தி மூவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பால், தயிர்,சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு மூலிகை திரவிய ங்களால்சிறப்பு அபிஷேகம்,ஆராத னை விசேஷ பூஜை சிறப்பு மலர் அலங்காரம், ஆகியவை நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு சமயக்குரவ ர்களான அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோர் ஸ்தல நாயகர் திரிபுர சம்காரமூர்த்தி யை வணங்கிய நிலையில் எழுந்தருளி சேவை சாதிக்கி ன்றனர் என்பது மிகவும் சிறப்பாகும்.

    Next Story
    ×