search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசும் செப்டிக் டேங்க்:  பயணிகள் பக்தர்கள் அவதி
    X

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசும் செப்டிக் டேங்க்: பயணிகள் பக்தர்கள் அவதி

    • பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
    • துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பழைய பேருந்து நிலைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் இருந்த பழைய கட்டண கழிப்பறையும் இடிக்கப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கழிவறையை இடித்த போதும், செப்டிக் டே ங்க் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இங்குள்ள புத்து மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், பஸ் ஏற வரும் பொது மக்களுக்கும் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

    குறிப்பாக, துர்நா ற்றத்தால் வயதானவர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுகிறது, இங்கு பஸ் ஏற ஏராளமான பள்ளி மாணவர்கள் வருவதால், அவர்கள் தவறி செப்டிக் தொட்டியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு செப்டிக் டேங்க் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். செப்டிக் டேங்க்கை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மந்தமாக நடந்து வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக கழிவறை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×