என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல் - வாலிபர் கைது திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல் - வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/17/1747485-bikemadhubootleparimudhal.jpg)
X
மதுபாட்டில்கள் கடத்தியதாக கைதான வாலிபரைபடத்தில் காணலாம்.
திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தல் - வாலிபர் கைது
By
மாலை மலர்17 Aug 2022 12:59 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவன் வைத்திருந்த பையில் புதுச்சேரி மது பாட்டில்கள் 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ரோசனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏட்டு வெற்றிவேல், போலீஸ்காரர் தர்மா ஆகியோர் திண்டிவனம் காலேஜ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை சோதனை செய்ய முயற்சித்தனர். அப்பொழுது அந்த நபர் தப்பிக்க முயன்றார் உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் அவனை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசா ரணையில் புதுச்சேரியை சேர்ந்த ஜானகிராமன் (வயது31) தெரிய வந்தது . மேலும் அவன் வைத்திருந்த பையில் புதுச்சேரி மது பாட்டில்கள் 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . மேலும் அவனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து அவன் வைத்திருந்த மது பாட்டில் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X