search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் சாலையோரங்களில் மண் அரிப்பு
    X

    சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளம்.

    மழையால் சாலையோரங்களில் மண் அரிப்பு

    • மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
    • கவனக்குறைவு ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    பூதலூர், அக்.9-

    திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கோவில்பட்டி வழியாக கல்லணை செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக கும்பகோணத்தில் இருந்தும் மயிலாடுதுறையில் இருந்தும் திருச்சிக்கு ஏராளமான கார்கள் சென்று வருகின்றன.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள் பலவும் லாரிகள் மூலமாக திருச்சி மார்க்கெட் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாலை அகலப் படுத்தப்பட்டு விட்டதால் இரண்டு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. கோவிலடி அருகே அரசு மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகளும் குறுக்கு நடுக்குமாக சென்று வருகின்றன.

    இந்த நிலையில் சுக்காம்பர் அருகே அண்மையில் பெய்த மழையால் சாலையின் ஓரத்தில் தொடர்ந்து பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு மூன்று பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. எதிர் புதிருமாக லாரிகள் வரும் நேரத்தில் சற்று கவனக்–குறைவாக ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    அதுபோல இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர் சற்று கவனம் பிசகினாலும் சாலையோர பள்ளத்தில் விழுந்துவிடும் அபாய நிலை உள்ளது.

    தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது எப்படி என்பதை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    Next Story
    ×