search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை கத்தியால் குத்திய  மகன்
    X

    கள்ளக்குறிச்சி அருகே சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை கத்தியால் குத்திய மகன்

    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×