search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
    X

    போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா வழங்கினார்.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

    • தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    சீர்காழி:

    சீர்காழியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்ஸ்பெக்டர் புயல்.பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் புறவழிச்சாலையில் வாகனதணிக்கை ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த கஞ்சா மொத்தவியாபாரி சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராஜா (எ) மனோஜ் (25) என்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி, இது தொடர்பாக 9பேரை கைது செய்து, ரூ.2 ½ லட்சம் மதிப்புடைய 5 கிலோ கஞ்சா மற்றும் 9 லட்சம் மதிப்பிலான சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சீர்காழி காவல்நிலையம் வருகைபுரிந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா, கஞ்சாவிற்பனையில் ஈடுப்பட்ட 9பேரை கைது செய்த போலீசாரை பாராட்டியதோடு, இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்து வதற்காக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ.8 லட்சம் மதிப்புள்ள 39 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அப்போது ஏடிஎஸ்பி. தங்கவேல், டிஎஸ்பிகள் லாமேக், கணேசன், ஜெயபாலன், சுகுமார், ராஜ்குமார் காவல்ஆய்வாளர் தனிப்பிரிவு சதீஷ், புயல் பாலச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×