search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் சிட்டுக்குருவி தினம் கொண்டாட்டம்
    X

    சிட்டுக்குருவி ஓவியங்கள் வரைந்த பள்ளி மாணவர்கள்.

    அரசு பள்ளியில் சிட்டுக்குருவி தினம் கொண்டாட்டம்

    • சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
    • சிறந்த படம் வரைந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில்:-

    மனிதனோடு மனிதனாய் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனம்தான் இந்த சிட்டுக்குருவி.சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை இன்றும் கிராமமக்களின் மனதில் உள்ளன.

    அதனால் தான், வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.அதனால்,இன்றைய கால ங்களில் சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றார்.

    மேலும், மாணவர்கள் சிட்டுக்குருவி வளர்க்க கூண்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் சிட்டுக்குருவியின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டினார். சிறந்த படம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, திவ்யா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×