search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை

    • மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத சனி பிரதோ ஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் , பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

    அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், 400 ஆண்டு கள் பழமை வாய்ந்த எல்லை யம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில்450 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லப விநாயகர் கோவி லில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பா ளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் எழுந்தரு ளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்தி பெருமா னுக்கும் மாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடை பெற்றது. விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×