என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 26,27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
- நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட 1484 வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
பெயர் சேர்க்க, நீக்க
இதில் 2023 ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள நபர்களில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ள வர்களின் பெயரினை நீக்கம் செய்ய படிவம் 7, பெயர், முகவரி மற்றும் புகைப்பட விபரங்களை திருத்தம் செய்ய மற்றும் அதே தொகுதிக்குள் இடமாற்றம் செய்திட படிவம் 8 ஆகியவற்றை வழங்கி பொதுமக்கள் பயனடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்
பொதுமக்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மனுக்களை அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும், Voter Helpline Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பாளை வட்டத்திற்கு உட்பட்ட கீழ்காணும் வாக்குச்சாவடி மையங்களில் 26-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு தொடர்பான ஆயத்தபணி மற்றும் 27-ந் தேதி காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.
மாற்று மையங்கள்
எனவே அந்த வாக்குச்சாவடி மையங்க ளுக்கு பதிலாக வேறு பள்ளி களில் வாக்குச்சாவடி மையங்களை அந்த 2 தேதிகளில் மட்டும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மாற்றாக பாளை ஏஞ்சலோ மெட்ரிக் பள்ளியில் செயல்படும். சாராள் தக்கர் பள்ளி வாக்குசாவடி சி.எஸ்.ஐ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும்.
தியாகராஜநகர் புஷ்ப லதா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஏற்கனவே 5 வாக்குச்சாவடி மையங்கள் செயல்பட்டு வரும் தியாகராஜநகரில் உள்ள ராம்நகர் ரோஸ் மேரி பள்ளியில் கூடுதல் வாக்குசாவடி மையமாக செயல்படும். மேலும் வி.எம்.சத்திரம் தூத்துக்குடி மெயின்ரோட்டில் உள்ள ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையம் கே.டி.சி நகர் ஓயாசிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்குசாவடி மையமாக செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்