search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
    X

    இயேசுநாதர் பிறந்தார் என்பதை குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்து அறிவிக்கும் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன்.

    பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

    • ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார்.
    • அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பேராலயம் பூண்டி மாதா பேராலயம். பூலோகம் போற்றும் புதுமைமாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் பிறந்தது குறிக்கும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.கிறிஸ்துமஸ் விழா நள்ளிரவு சிறப்பு திருப்பலி 11.45 மணிக்குதொடங்கியது. பேராலய மேடையில் பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் பங்கு கொண்டனர்.

    .சரியாக 12 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்க, உன்னதங்களிலே ஓசானா பாடல் பாடப்பட்ட போது இயேசுநாதர்பிறந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக பேராலயஅதிபர் சாம்சன் குழந்தை இயேசு சுரூபத்தை உயர்த்தி காண்பித்தார். அதன் பின்னர் குழந்தை இயேசு சுரூபத்தை துணை அதிபர் பெற்று அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு சுரூபத்தை வைத்து புனிதம் செய்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசுநாதரின் சிறப்புகளையும் இயேசுநாதர் பிறப்பால் உலகம் பெற்ற நன்மைகளையும் பேராலய அதிபர் சாம்சன் திருப்பலியின் போது எடுத்துக் கூறி அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    இன்று கிறிஸ்துமஸ் திருப்பலிகள் காலை, மதியம், மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது. இன்று நாள் முழுவதும் பூண்டி மாதா பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து அருள் தந்தையரிடம் ஆசி பெற்று சென்றனர். விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×