search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை நேர சிறப்பு வகுப்பால் பேருந்தில் செல்லும் மாணவிகள் தவிப்பு
    X

    மாலை நேர சிறப்பு வகுப்பால் பேருந்தில் செல்லும் மாணவிகள் தவிப்பு

    • மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
    • வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.

    சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவிகள் வீட்டுக்கு செல்ல இரவு 7.30 மணி ஆகிறது.

    இதனால் கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    பொது தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    மேலும் மாணவிகள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும், பள்ளி சிறப்பு வகுப்பை மாலை 5 மணிக்கு முடித்துக் கொண்டு 5 மணிக்கு மாணவிகளை வீட்டிற்கு அனுப்பினால் கூட மாணவிகள் பேருந்தில் பயணித்து 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்வார்கள் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    Next Story
    ×