search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு தூய்மை பணி இயக்கம்
    X

    தூய்மை இயக்கம் பணிகள் குறித்து மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் பேசினார்.

    சிறப்பு தூய்மை பணி இயக்கம்

    • வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
    • வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வல்லம்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் வல்லம் பேரூராட்சியில் பொதுமக்கள் பங்களிப்போடு சிறப்பு தூய்மை பணி இயக்கம் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் தலைமையில் மேற்கொள்ளபட்டது.

    பேரூராட்சி 2-ம் வார்டில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது . வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    இம்முகாமில் வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் , மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வல்லம் பேரூராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தருமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×