search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்
    X

    தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடந்தது.

    சிறப்பு தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

    • முகாமில் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாக தொழுநோயை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ள 5 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் வழிகாட்டுதல் படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா நகர் பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாமின் ஒரு பகுதியாக சிறப்பு தோல் நோய்கள் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலமாக தொழுநோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் தொழுநோய் அலுவலகத்தைச் சார்ந்த நலக் கல்வியாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், டாமின் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ள 5 புதிய நோயாளிகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டனர்.

    புதிய நோயாளிகள் 5 நபர்களுக்கும் உடனடியாக சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிவகுமார் மேற்கொண்டார்.

    Next Story
    ×