search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடலூர் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடலூர் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
    • உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர்.

    கடலூர்:

    ஈஸ்டர் தினத்தை யொட்டி கடலூரில் உள்ள தேவால யங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்டு 3-ம் நாள்உயிர்த்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகின்றனர். இதைமுன்னிட்டு, கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இரவு 11.40 மணிக்கு ஆலயத்தின் வெளியே பிரமாண்ட பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்திகளில் புதிய தீபத்தை ஏந்திக்கொண்டு தேவலாயத்துக்குள் சென்றனர். 12 மணிக்கு இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்ததை விளக்கும் விதமாக தேவலாயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலித்தன.

    பின்னர் பங்கு தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் கைகளில் புதிய தீபத்தை ஏந்தி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து காலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புதிய மெழுகு தீபத்தை அணையாமல் வீட்டுக்கு கொண்டு சென்றனர். 40 நாட்கள் தவக்காலம் முடிந்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு, உணவு பொருட்களை வழங்கி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினர். இதேபோன்று கடலூர் சப்- ஜெயில் சாலையில் உள்ள தூய எபிபெனி ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    Next Story
    ×