என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஓவியம் வரையும் பக்தர்கள்.
நெல்லையில் இன்று மாலை சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

- சிவன்கோவில்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
- பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், ஆன்மீக பட்டிமன்றம், பிரம்ம குமாரிகளின் பக்தி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கிறது.
நெல்லை:
மகா சிவராத்தி ரியையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
6 கால பூஜைகள்
பிரசித்தி பெற்ற சிவா லயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்மாள் கோவிலில் சிவராத்திரியையொட்டி இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரையிலும் 6 கால பூஜைகள் நடக்கிறது.
இதனால் கோவில் நடை விடிய, விடிய திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மேலும் பள்ளி மாணவி களின் பரதநாட்டியம், ஆன்மீக பட்டிமன்றம், பிரம்ம குமாரிகளின் பக்தி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கிறது.
இதனையொட்டி கோவில் கோபுரங்கள், முகப்புகளில் அலங்கார விளக்குகள் பொருத்தப் பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.
சிவராத்திரி பெருவிழா
அரசு உத்தரவின்பேரில் நெல்லையப்பர் கோவில் சார்பாக பாளை தசரா மைதானத்தில் சிவராத்திரி பெருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து அங்கு மங்கள இசை, திரு முறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம் இசைத்தல், பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை நடக்கிறது.
அடிப்படை வசதிகள்
இதனை கண்டுகளிக்க ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் திரளாக வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட் டுள்ளது.
இதற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறையின் நெல்லை மண்டல துணை ஆணையர் ஜான்சி ராணி, இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லை யப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் சந்திப்பு கயிலாசநாதர் கோவில், குன்னத்தூர் ( கோத பரமேஸ்வரர் கோவில்(செங்காணி), குறிச்சி சொக்கநாதர் கோவில் மேலநத்தம் அக்னீஸ்வரர் கோவில், கருப்பந்துறை அழியாபதிஸ்வரர் கோவில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன.