என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடி முதல் சனிக்கிழமை குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
- ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- இந்த வருடம் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இது சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இந்த வருடம் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதே போல் திண்டுக்கல் மலையடிவாரத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் அதன்படி இன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சன்னதி முன்பு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக ஆடி 18-ம் தேதியன்று இங்கு சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.