என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பரமத்தி வேலூர் பகுதியில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
- பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் என பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.