என் மலர்
உள்ளூர் செய்திகள்
நடுக்கடலில் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை: தொடர்ந்து அத்துமீறல்
- ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.
- விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
அவர்கள் எல்லைதாண்டி வந்தாக கூறி சிறைபிடிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் 13 பேரை சிறைபிடித்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து 171 விசைப்படகுகளில் 1,200-க்கும் மேற்பட்ட மீனர்கள் மீன்துறை அலுவலக அனுமதி பெற்று கடலுக்கு சென்றனர். அவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான தனுஷ்கோடி-தலை மன்னார் இடையே வலை களை விரித்து இருந்தனர்.
நள்ளிரவில் அந்த பகுதிக்கு ரோந்து பணி வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகு களை சுற்றிவளைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட பெரும்பாலான படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் கடைசியாக தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்த சந்தியா சதீஷ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல்பகு தியில் மீன்பிடித்ததாக கூறி, அந்த படகில் இருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பயாஸ், சேசு, மண்டபம் காந்தி நகரைச் சேர்ந்த ரவி ஆகிய 10 பேரையும் சிறைபிடித்து இலங்கையில் உள்ள தாழ்வுப்பாடு துறைமு கத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகி றார்கள்.
முன்னதாக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த நண்டு, இறால் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்களையும், அவர்களுக்கு சொந்தமான ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை யும் கைப்பற்றினர்.
கடந்த மாதம் ஒரே நாளில் ராமேசுவரம் மீன வர்கள் 34 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலை யில் மீண்டும் மண்டபத்தை சேர்ந்த 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்ப வம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.