என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி
- காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது.
- தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.
புதுச்சேரி
காரைக்கால் திருநள்ளாறு சாலை தருமபுரம் அருகே, பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. தருமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி மற்றும் காலரா நோய் பாதிப்பு நீங்க வேண்டி, ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தேர் பவனி நடத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி பாதிப்பு நீங்கியதால், புனித செபஸ்தியாரை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த தேர் பவனி நடத்தப்படுகிறது.
அறுவடை தொடங்கவுள்ள நிலையில், செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மைக்கேல் அந்தோணியார், சம்மனசு சொரூபத்துடன் தேர் பவனி நடைபெற்றது. தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டனர்.