என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான ஹாக்கி போட்டி: சீர்காழி சபாநாயக முதலியார் இந்து பள்ளி மாணவர்கள் தேர்வு
- மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.
- சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்ற மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 வயது உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கான மாநில குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்ட அணிகளும் மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அணியும் ஆக 39 அணிகள் பங்கு பெற உள்ளது.
இந்த மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இச்சாதனை புரிந்த புரிந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர்.முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள்.முரளி, .மார்கண்டன், .சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர்.பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் .இராமகிருஷ்ணன், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் .அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள்.
துளசிரங்கன், .வரதராஜன், பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.