என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் இருந்து கலுங்குவிளை வழியாக சாத்தான்குளம் வந்த 2 அரசு பஸ்கள் நிறுத்தம் - பொதுமக்கள் பாதிப்பு
- நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
- கலுங்குவிளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான்குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
நெல்லை:
சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங் குளம், கொம்பன் குளம், கலுங்குவிளை வழியாக செல்லும் வழித்தடம் கிராம புற பகுதி என்பதால் ஒரு சில பஸ்கள் மட்டுமே உரிய நேரத்தில் இயக்கப்படுகின்றன.
அதில் நெல்லையில் இருந்து பேய்க்குளம், பழனியப்பபுரம், விராக்குளம், கோமானேரி, கலுங்கு விளை, நெடுங் குளம் வழியாக இயக்கப் பட்ட அரசு பஸ் தடம் எண் 137 ஏ, நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் கலுங்கு விளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான் குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆதலால் அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் இதனை கவனித்து நெல்லையில் இருந்து கலுங்குவிளை வழியாக இயக்கப்பட்ட 137ஏ, 137 கே அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ் கூறுகையில், கலுங்கு விளை வழித்தடத்தில் இயக்கப்பட்டு நிறுத்தம் செய்யப்பட்ட பஸ்களை இயக்கிட கோரி கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டதன் பேரில் கடந்த வாரம் தடம் எண் 137ஏ இயக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் தரப்பில் முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டநிலையில் தற்போது இயக்கப்பட வில்லை. ஆதலால் அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.