என் மலர்
உள்ளூர் செய்திகள்
மரகத பூங்காவில் ஒளிரும் தோட்டம் பணி 'திடீர்' நிறுத்தம்
- தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
- மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை ஆகிய பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் கட்டுமானங்களுக்கு தொல்லியல்துறை தடை விதித்துள்ளது. 100 மீட்டர் தாண்டி, தொல்லியல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடம் கட்ட அத்துறை அங்கீகார குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான 2.47 ஏக்கரில் உள்ள மரகதபூங்காவில் சுற்றுலாத்துறை, தனியார் முதலீட்டில்,ரூ. 6கோடி மதிப்பில் லேசர் ஒளியுடன் கூடிய "ஒளிரும் தோட்டம்" அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. மரகத பூங்காவை ஒட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் பழைய அர்ச்சுனன் தபசு உள்ளது. அதன் அருகே ஆழமான பள்ளம் தோண்டுவதால் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் தற்போது பணிகளை நிறுத்தக்கூறி தொல்லியல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.