search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் பொதுமக்களை விரட்டி கடிக்கும் தெருநாய்கள்
    X

    ஆர்.எம்.காலனி ஈ.வெ.ரா. சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள்.

    திண்டுக்கல்லில் பொதுமக்களை விரட்டி கடிக்கும் தெருநாய்கள்

    • தெரு நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன.
    • சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் சாலையில் கால்நடைகள், நாய்கள் சுற்றித்திரிவதை கட்டு ப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் கருத்தடை செய்தனர். இதனால் சற்று குறைந்திருந்த நாய்கள் தொல்லை தற்போது மீண்டும் அதிகரி த்துள்ளது. நாகல்நகர், பஸ் நிலையம், ஆர்.எம்.காலனி, ரெயில் நிலையம், பாரதிபுரம், சந்தைபேட்டை, பழனிசாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சில ெதருநாய்கள் காயங்களுடன் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. எனவே சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×