search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
    X

    தஞ்சையில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

    • தஞ்சாவூர்- புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் மாசில்லா தஞ்சாவூர்-புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். அரண்மனை வளாகத்தில் பேரணி முடிவு அடைந்தது.

    முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    தேவையில்லாத பொருட்–களை எரிக்க கூடாது.

    மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

    மீறி விற்பனை செய்தால் போலீசார் மூலம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேரணியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், டாக்டர்கள் சிங்காரவேலு, ராதிகா மைக்கேல்,

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை சேர்மன் டாக்டர். வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×