search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த  விவகாரம்: 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காரைக்கால் மருத்துவமனையில் விசாரணை
    X

    காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய காட்சி. 

    மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரம்: 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காரைக்கால் மருத்துவமனையில் விசாரணை

    • மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காரைக்கால் மருத்துவமனையில் விசாரணை செய்தனர்.
    • சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடை த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்து வமனையில் சிகி ச்சையில் இருக்கும் போது, போலீசாரும், மருத்து வர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்து வர்கள் மீது துறைரீதியிலான் நடவ டிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    மாணவனின் பெற்றோ ரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உத்தரவின் பேரில், புதுச்சேரி ராஜீ வ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் முரளி தலைமையில், மருத்து வர்கள் ரமேஷ், பாலச்சந்தர் உள்ளிட்ட3 பேர் கொண்ட குழுவினர், காரைக்காலுக்கு வந்தனர். இக்குழுவினர், காரைக்கால் அரசு மருத்து வமனை கண்காணிப்பாளர், டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களிடம் துருவி த்துருவி விசாரணையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×