என் மலர்
உள்ளூர் செய்திகள்
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற மாணவ- மாணவிகள்
- தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதிமொழி ஏற்றனர்.
திருவாரூர்:
தேசத்தந்தை காந்தியடி களின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி மேற்கொள்ள ப்பட்டது.
வெண்ணவாசல் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதி மொழி ஏற்றனர்.
இதுபோல் கொண்டையானிருப்பு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையிலும், தீபங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வ ராணி, திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆசிரியர் கோமதி, பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வீரமணி, பூங்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.