என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களை உறுதி மொழி எடுக்க வைத்த இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி.
திண்டிவனத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை: போலீஸ் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை
- அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு தகவல் வந்தது.
- உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திண்டி வனம் மேல் பேட்டை பகுதியில் இருந்து திண்டி வனத்திற்கு அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகா சத்தில் ஈடுபடுவதாக ரோஷ னை இன்ஸ்பெக்டர் அன்ன கொடிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற ரோசனை இன்ஸ்பெக்டர் படிக்கட்டில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை கீழே இறங்க சொல்லி இனி நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் எனவும், படிக் கட்டில் தொங்கி அட்டகா சத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார். இனி இது போல் ெதாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
Next Story






