என் மலர்
உள்ளூர் செய்திகள்

காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம்
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை சார்பாக காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம் வழங்கப்படுகிறது.
- பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக்க லைத் துறை சார்பாக, வாழையில் ஊடுபயிராக காய்கறிகளை வளர்க்க மானியமாக எக்டருக்கு ரூ.10 ஆயிரம் நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, தென்னை யில் ஊடுபயிராக வாழை பயிர் செய்ய மானியமாக எக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story






