என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி - நெடுவயல் பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு-பரிசு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி - நெடுவயல் பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு-பரிசு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/29/1873768-516892401senkottai29042023f89fptmcmy.webp)
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி - நெடுவயல் பள்ளி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு-பரிசு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
- கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதுார் நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், அச்சன்புதுார் பேரூராட்சி மன்ற தலைவா் டாக்டா் சுசிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமைஆசிரியா் சுதாநந்தினி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி பள்ளியின் சார்பில் தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமைஆசிரியா் கார்த்திக்கேயன், வெள்ளத்துரை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தம்புசாமி, மணிகண்டன் மற்றும் இசக்கித்துரை, இசக்கி, சந்திரன், அருட்செல்வம், உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமைஆசிரியா், ஆசிரியா்கள் சார்பாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினார்.