என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு: உறவினர்கள் முற்றுகை
    X

    கள்ளக்குறிச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்த பெண் திடீர் சாவு: உறவினர்கள் முற்றுகை

    • மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு மனைவி பவுன் (வயது 50) கூலி தொழிலாளி, இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 27- ந் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்தாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 2- ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில் பவுனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதற்காக எழுந்து சென்றவர் மயக்கம் வருவதாக கூறி மீண்டும் வந்து படுக்கையில் படுத்துள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பவுன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அவரது உறவினர்கள் பவுன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது உடற்கூறு ஆய்வு முடிவு தெரிந்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறி உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை ஏற்று உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து செல்வராசு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சைக்காக வந்த பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×