search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்லூரியில்  கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்லூரியில் கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து பாரதி விளக்கி கூறினார்.
    • கோடைகால உணவு முறைகள் குறித்து மாணவி அகல்யா, கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி உதவி முதல்வர் பாரதி முன்னிலை வகித்து, கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் குறித்து விளக்கி கூறினார். கோடைகாலத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி அகல்யா, மாணவர் கெஜின் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ, மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×