என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா தொடக்கம்
- கலை நிகழ்ச்சிகளில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
- கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் இந்த ஆண்டு கோடை விழா நேற்று மாலை தொடங்கியது.
இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.
பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்ன பொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் நன்றி கூறினார்.