என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு இன்று அதிகாலை திடீர் ஆய்வு
- தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர்.
- கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து மது கடத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒழுக்கீனமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் மது போதையில் ஓட்டுகிறார்களா என சோதனை செய்து மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர். இதனையடுத்து கடலூரில் மதுபோதையில் ஏ.டியம் எந்திரத்தை வாலிபர் ஒருவர் இரவில் உடைத்த சம்பவமும் நடைபெற்றது. புதுவை மாநிலத்திலிருந்து மது அருந்தி வருவதும், மது கடத்தல் சம்பவமும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே உள்ள சோதனை சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு சென்று அங்கு திடீரென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் அங்கு பணியில் இருந்த போலீசார்கள் சரியான முறையில் சோதனை செய்கின்றார்களா அல்லது சரியான முறையில் அவர்கள் பணிகளை செய்யாமல் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீசார்களிடம் மது கடத்தல், மது போதையில் வாகனங்களை ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக விபத்து ஏற்படும் விதத்தில் லோடுகளை ஏற்றி வருவது, ஒழுங்கீனமான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலி பர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்க ளை யாரேனும் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.