என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவசமாக எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கல்வி எழுதுபொருட்கள் வழங்கல்
- மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர்,பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது,
- பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.
சீர்காழி:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டின் முதல்நாள் தொடக்கவிழா விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலாரெத்தி னகுமாரி தலைமை வகித்தார்.
நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய், கல்வியாளரும், பெற்றோர் ஆசிரியசங்கத்தலைவர் பாபுநேசன்,துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்துக்கொண்டு அரசின் பாடநூல்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புறையாற்றினார்.
தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய் தனது சொந்த செலவில் 170 மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர், பென்சில், நோட் ஆகிய கல்விஎழுதுப்பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளை கார்டூன் வேடமணிந்து சாக்லெட் கொடுத்து உற்சாக ப்படுத்தி வரவேற்றனர்.
நிகழ்வில்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.






