என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
7 பள்ளிகளுக்கு ரூ.26 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கல்
- பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது.
- கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்.
திருத்துறைப்பூண்டி:
ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக அளவில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 7 பள்ளிகளுக்கு ரூ. 26 லட்சத்தில் டேபிள், நாற்காலி, கம்யூட்டர், பிரிண்டர், ஸ்மார்ட் கிளாஸ் புரஜக்டர் மேஜை, மின்விசிறி மற்றும் சிறுவர்கள் அமரும் டெஸ்க் உள்ளிடட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கவுரிசாமி நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட வட்டாரக்கல்வி அலுவலர் இளங்கோவன் பேசுகையில், அறம் செய் என்பதை ஓ.என்.ஜி.சி சரியாக பின்பற்றுகிறது.
வட்டார பள்ளிகளில் பெரும்பான்மை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஓ.என்.ஜி.சி அதிக அளவில செலவு செய்து வருகிறது என்றார்.
மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் பேசுகையில், மக்களின் தேவையறிந்து நேரிடையாக பிரதிநிதிகளை அனுப்பி ஓ.என்.ஜி.சி சேவையாற்றி வருவது பாராட்டத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரஜினி சின்னா, உமா மகேஷ்வரி சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ் கருனாநிதி, சொக்கலிங்கம், பள்ளி நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடிக்கால் பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீ வைஷ்ணவி தேவி, 4-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெனாசிர் ஜாஸ்மின், 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி மணிராவ், மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தியானபுரம் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், குளிக்கரை நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் மதிவாணன் கூறுகையில், ஓ.என்.ஜி.சி, சி.எஸ்.ஆர். நிதியை சரியாக பயன்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது என்றனர்.
கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பிலும், கவுரிசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலும், மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளிக்கு ரூ. 5.2 லட்சம் மதிப்பிலும், கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ. 1.2 லட்சம் மதிப்பிலும், குளிக்கரை மேற்கு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 2.9 லட்சம் மதிப்பிலும், தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலும், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலும் உபகரணங்களை நாகை சுவீட் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி துணை பொது மேலாளர்கள் வேணுகோபால், பிரபாகரன், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள்விஜய்கண்ணன், சந்திரசேகர், ஒருங்கி ணைப்பாளர் முருகானந்தம், தலைமை ஆசிரியர்கள் ராஜரெத்தினம், பிரபாவதி, ஆனந்தி, மாலதி, லதா, விநாயகராஜன், சுகந்திபாலா, சேமங்கலம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், சுவீட் என்.ஜி.ஓ. ராஜேந்திரன் அந்தந்த பள்ளி மேம்பாட்டு குழு தலைவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்