என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் நாடார் வாலிபர் சங்க முப்பெரும் விழா : காமராஜரின் வழித்தோன்றல் என்பதிலேயே எனக்கு பெருமை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
    X

    சுரண்டையில் நாடார் வாலிபர் சங்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள காமராஜர் அரங்கத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய போது எடுத்த படம். அருகில் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன், பழனி நாடார் எம்.எல்.ஏ. உள்ளனர்.


    சுரண்டையில் நாடார் வாலிபர் சங்க முப்பெரும் விழா : காமராஜரின் வழித்தோன்றல் என்பதிலேயே எனக்கு பெருமை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

    • லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காமராஜர் தற்போது இருந்து இருந்தால் பாராட்டி இருப்பார்.
    • தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு தொடக்க விழா, மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்காக காமராஜர் அரங்கம் திறப்பு, மாணவர்க ளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

    தமிழிசை சவுந்தரராஜன்

    சங்க கவுரவ தலைவர், தொழிலதிபர் எஸ்.வி. கணேசன் தலைமை தாங்கி னார். சுரண்டை சிவகுரு நாதபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார், பொன்ரா மருத் துவமனை டாக்டர் செல்லையா, நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், கவுரவ ஆலோசகர்கள் காமராஜ், சாமுவேல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் அரிராம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காமராஜரின் வழித்தோன்றல் என்பதிலேயே எனக்கு மிகப் பெருமை. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய காமராஜர் தற்போது இருந்து இருந்தால் பாராட்டி இருப்பார் என பிரதமர் மோடி காமராஜருக்கு புகழ் சூட்டினார்.

    தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்ற வர்கள். இந்தியாவிற்கே பொருளாதாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள். நீங்கள் அனைவரும் வேலைக்கு செல்பவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, சுரண்டை ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் செய்து வைத்திருந்த பனை பொருட்கள் கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்து அங்கு வைக்கப்பட்டிருந்த நுங்கு வண்டியை உருட்டி விளையாடினார். அப்பொழுது தனக்கு சிறுவயது ஞாபகம் வந்ததாக தெரிவித்தார்.

    முன்னதாக அவருக்கு சங்ககவுரவ தலைவர், தொழிலதிபர் எஸ்.வி. கணேசன் தலைமையில் சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பள்ளி மாணவ, மாணவி களின் சிலம்பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில், ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைக்க ஏற்பாடு செய்த தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பா.ஜனதா மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், அனு பில்டர்ஸ் வேல்முருகன், தட்சண மாறநாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன், பெரீஸ் பிஸ்கட் கம்பெனி மகேந்திரவேல், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, தட்சண மாற நாடார் சங்க செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், பொன்ரா மருத்துவமனை டாக்டர் பொன்ராஜ், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு லூர்து நாடார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனித்துரை, நகர செயலாளர் ஜெயபாலன், ஸ்டீபன் சத்யராஜ், மாரிச்செல்வி மகேந்திரன், முல்லை கண்ணன், சேர்மச் செல்வம்,கே.டி.பாலன், மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடு

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுரவ தலைவரும், தொழிலதிபரு மான எஸ்.வி. கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளராக ராமர், துணைத் தலைவர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் முருகன், மற்றும் கவுரவ ஆலோசகர்கள், நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள், செயற்குழு உறுப்பி னர்கள், காமராஜர் அரங்க கட்டிட பணிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×